Advertisement

Main Ad

அட்டாளைச்சேனை மண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியை தலைமை ஒருபோதும் மீறாது-தலைவர் கௌரவ ரவுப் ஹகீம் தெரிவிப்பு



அட்டாளைச்சேனை மண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியை தலைமை ஒருபோதும் மீறாது , மாகாண அமைச்சு காலம் முடிவடைந்தவுடன் அட்டாளைச்சேனை மண்ணின் 30 வருட கனவான பாராளுமன்ற உறுப்பினர் அந்தஸ்த்தை அந்த மண்ணுக்கு வழங்குவேன் என்று இன்று  நடைபெற்ற  மறைந்த தலைவரின் 67 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞ்சர் காங்கிரஸ் ஏற்பாடு செய்து இருந்த  அம்பாறை மாவட்ட இளைஞ்சர் காங்கிரஸ் மாநாடும் பல்துறை சார்ந்து பிரகாசிக்கும் இளைஞர்களை கௌரவிக்கும் வகையிலான ‘தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த விருது- 2015 வழங்கும் நிகழ்வும் இன்று  சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இளைஞ்சர் காங்கிரஸ் தேசிய அமைப்பளர் கௌரவ மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில்நடைபெற்றது   

இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் சட்டமுதுமானி அல்ஹாஜ் ரவுப் ஹகீம் அவர்கள் கலந்து கொண்டு உரையாயற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்கள் . இம்மாநாட்டுக்கு  கௌரவ அதிதிகளாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி அமைச்சர்கள் ,முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினார்கள் , உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் , கட்சியின் உயர்பீட உறுப்பினகள் என பலரும் கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட 204 கிராம சேவகர் பிரிவில் இருந்து ஒரு கிராமசேவகர் பிரிவில் 5 நபர்கள் எனும் அடிப்படையில்  அழைக்கபட்ட இளைஞ்சர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடதக்கது  .