Advertisement

Main Ad

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அட்டாளைச்சேனை மக்களுக்கான மேலதிக பரிசே கிழக்கு சுகாதார அமைச்சு



அட்டாளைச்சேனை மக்களின் 30 வருட பாரளுமன்ற கனவு இம்முறை நிச்சயம் நனவாகும்  அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவுப் ஹகீம் அவர்கள் உறுதியாக உள்ளார்கள் .ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இரு தேசியபட்டியல் 2 1/2 வருடங்களாக பிரிக்கபட்டு 4 பிரதேசங்களுக்கு கொடுக்கப்படவுள்ளது அந்த வகையில்  அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு பிந்திய 2 1/2 வருடங்கள் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது. 

சுகாதார அமைச்சு என்பது பல்வேறு தியாகம் செய்த, எதுக்கும் சோரம்போகாத முஸ்லிம் காங்கிரசை தனது மூத்த பிள்ளை போன்றும் , மூத்த  சகோதரன்  போன்ரும் நேசிக்கும் தாய்மார்களையும் சகோதரிகளையும் , கட்சியின் வளர்ச்சிக்கு தங்களையே அர்ப்பணம் செய்து கொண்டு இருக்கும் தியாகிகளான இளைஞ்சர்களையும் சகோதரர்களையும் கொண்ட அட்டாளைச்சேனை மண் மீது தலைவர் கொண்டுள்ள பாசத்தின் வெளிப்பாடாக  மேலதிகமாக அட்டாளைச்சேனை மக்களுக்கு தரப்படுள்ள தலைவரின் பரிசு .