இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் கஷ்மீர் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு 68 ஆண்டுகளாக அடிமைகள் போல நடத்தப்பட்டுவருவதை எதிர்த்து இன்று காலை கொழும்பில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்க்கு எதிரில் கஷ்மீர் கல்வியலாளர்கள் பேரவை கண்டன பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
பேரணியில் கலந்துகொண்டிருந்த கல்வியலாளர்கள் இந்த செயலை கடந்த 1947ம் ஆண்டுமுதல் ஐக்கிய நாடுகள் சபையில் விவாததிற்க்கு எடுத்துகொண்டாலும் இதுவரை உரிய பதில்கள் எதுவும் இல்லது அந்த மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்வதாகவும்.ஐ.நா சபை கூட பாராமுகமாக அலச்சியம் செய்வதாகவும் குற்றம் சுமத்தினர்.
இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்த சர்வதேச மனிதஉரிமைகள் அமைப்பின் இலங்கைக்கான சமாதான தூதுவர் பொறியலாளர் அன்வர் எம். முஸ்தபா ஊடகங்களுக்கு கருத்து போது :
கஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக ஐ.நா பொதுக்கூட்டத்தில் சபையின் கவனத்திற்க்கு கொண்டு வந்து அந்த மக்களின் அகதி வாழ்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் துரித கதியில் இதற்கான முடிவினை ஐ.நா அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். அத்துடன் இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும் நட்பாக பேசி இந்த பிரச்சினையை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவர இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
அதனை தொடர்ந்து இவைகள் சகலதும் அடங்கிய எழுத்து மூல மகஜர் ஒன்றினை ஐ.நாடுகள் சபையின் கொழும்பு உயரதிகாரிகளிடம் கஷ்மீர் கல்வியலாளர்கள் பேரவை கையளித்தது .