Advertisement

Main Ad

தெஹியத்தக்கண்டி முறுத்தகஸ்பிட்டிய பௌத்த போதனை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு



தெஹியத்தக்கண்டி முறுத்தகஸ்பிட்டிய விகாரையில் அமைக்கப்படவுள்ள பௌத்த போதனை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  (27) முறுத்தகஸ்பிட்டிய விகாரையின் பொறுப்பதிகாரி பதவிய சமீத்த ஹிமி தலைமையில் நடைபெற்றது.

இவ் வைபத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் தெஹியத்தக்கண்டி இணைப்பு செயலாளர் எம்.எஸ்.ரவூப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெஹியத்தக்கண்டி இணைப்பாளர் ரணவீர திஸாநாயக்க, பௌத்த தேரர்கள், பிரதேச பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.