Advertisement

Main Ad

மாகாண அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதாரத் துறையை முன்னேற்றுவது தொடர்பான கலந்துரையாடல்.



            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் சாதி,மத, பேதம் பாராது, அனைத்து வைத்தியசாலைகளின் தரங்களையும்  உயர்த்தி, மக்களுக்குச் சிறப்பான சுகாதார சேவையினை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர் தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் சட்டத்தரணி கே.துரைராஜ சிங்கம், வீதி அபிவிருத்தி அமைச்சர் திருமதி.ஆரியதாச கலப்பதி, எதிர்க் கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, அனைத்து மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்களினதும், உறுப்பினர்களினதும் செயலாளர்கள், இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி உதவினர்.

Post a Comment

0 Comments