Advertisement

Main Ad

கிழக்கு முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஓட்டமாவடியில் கர்த்தால் அனுஸ்டிப்பு

கிழக்கு முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை புதன் கிழமை ஓட்டமாவடியில் பூரண கர்த்தால் அனுஸ்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக கல்குடா பிரதேச அபிவிருத்திகுழுக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.



மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயம்,மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மஹிந்தசிந்தனை திட்டத்தின் ஆயிரம் பாடசாலை நிகழ்ச்சி உள்வாங்கப்பட்டு மஹிந்தோய விஞ்ஞான ஆய்வுகூடம் என பெயரிடப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

இவ் ஆய்வு கூடமானது  நாட்டின் தெரிவு செய்யப்பட்ட  மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளில்சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுமேலதிகமாக விஞ்ஞான ஆய்வு கூடஅறைகள்,கணித கற்கை அறைதகவல் தொழில் நுட்ப அறைகள்,கனிணி கூடம் என சகலவசதிகளையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு  அனைத்து வளங்களையும் உள்ளீடுகளாக கொண்டுள்ளது.
இதனை கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல மாவட்டங்களுக்குவிஜயம் செய்து திறந்து வைத்தார்.

பூர்த்தி செய்யப்படாமல் இருத்த கட்டிடங்கள் மற்றும் புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் “விஞ்ஞானஆய்வு” கூடமாக பெயர் மாற்றப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாகவே இவ் ஆய்வு கூடம் ஓட்டமாவடி கல்வி கோட்டத்தின் குறிந்த இரு பாடசாலைகளில்ஆய்வு கூடத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினை கிழக்கு மாகாண கல்வி பணிமனைமேற்கொண்டது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் அவர்களின் உத்தரவுக்கு அமைவாக கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அவர்களை கொண்டு திறக்குமாறு வலயக்கல்வி பணிப்பாளர்ஊடக குறிந்த பாடசாலையின் அதிபர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரு பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் முதலமைச்சரை கொண்டு திறப்பதற்குவிரும்பாத நிலையிலும் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பாடசாலை அதிபர்களினால் நிர்பந்தமானநிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எமது பிரதேச அபிவிருத்தியில் எவ்வித பங்கும் வகிக்காத இந்த மாகாண முதலமைச்சர் ஏன் எமதுபாடசாலை கட்டிடத்தினை திறக்க வேண்டும்யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது” முதலமைச்சா் மீது விமர்சனம் எழுத்துள்ளது.

இது பற்றி உரிய முறையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்,மாகாணகல்விப்பணிப்பாளர்,வலயக்கல்வி பணிப்பாளர் ஆகிய உயர் மட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்விதநடவடிக்கைகளும் இது விடயத்தில் அவர்கள் எடுக்காமை அலச்சிய போக்கினை கையாண்டமைக்காகநாளை புதன் கிழமை கட்டிட திறப்பு விழா அன்று முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துபூரண கர்த்தால் அனுஸ்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக கல்குடா பிரதேச அபிவிருத்தி குழுக்களின்ஒன்றியம் தெரிவித்துள்ளது.