வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக ஐ.நா விசாரிக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது
வடமாகாண முஸ்லிம்களின் 25வது வருட வெளியேற்றத்தையிட்டு தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சமாதானப் பேரவையின் அறிக்கையில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை 2002 ஆண்டு முதல் 2009 வரையான காலத்தை மட்டுப்படுத்தியிருக்கின்றது.
ஆனாலும், இந்தக் காலப்பகுதியோடு மாத்திரம் அதன் விசாரணைகள் நின்று விடாது 1990 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த சுமார் 90 ஆயிரம் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றியும் யுத்தத்தின் காரணமாக இடம்பெற்ற இன்னும் பல தீவிர மனித உரிமை மீறல்கள் பற்றியும் பின்னோக்கி விசாரிக்கப்பட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவை கருதுகின்றது.
இந்த ஒக்ரோபர் மாதத்துடன் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் குடி மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட 25 ஆவது ஆண்டு நிறைவடைகிறது.
வெளியேற்றப்பட்டவர்களில் 80 சதவீதமானோர் தங்களது பூர்வீக வாழ்விடங்களுக்கு வெளியே தொடர்ந்தும்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
வெளியேற்றப்பட்டவர்களில் 80 சதவீதமானோர் தங்களது பூர்வீக வாழ்விடங்களுக்கு வெளியே தொடர்ந்தும்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனினும், இலங்கை மக்களில் ஒரு பிரிவினராகிய இவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு பொது கவனம் அல்லது முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஒரு நீதியான தீர்வு இதுவரைக் கிட்டவில்லை.
இலங்கையில் நல்லிணக்க, பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் இலங்கை ஏற்கொண்ட இணை ஆதரவாளரைக் கொண்ட அரசாங்கத்தின் முடிவு நாட்டின் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.
இன்று கூட, ஆறு ஆண்டுகள் போர் முடிவுக்கு வந்த பிறகும் 1990 ஆம் ஆண்டு ஒரு பெரும் தொகையினராக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் தற்காலிக வதிவிடங்களில் வாழ்ந்து கொண்டிருப்பது நாட்டில் நீதி மற்றும் நல்லிணக்க செயல்முறையிலுள்ள ஒரு குறைபாடாகவும் குற்றச்சாட்டாகவும் உள்ளது.
இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் சமீபத்திய மீள்குடியேற்றம் வில்பத்து தேசிய புங்கா அத்து மீறல் என்று சர்ச்சைக்குரிய அத்துமீறலாகக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கை 2002-09 வரை மட்டுப்படுத்தப்பட்ட காலமாக இருப்பதால் அதற்கு முன்னுள்ள காலப்பகுதியும் விசாரணைக்காக சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.