ஒட்டமாவடி மீறாவோடை ஆகிய பிரதேசத்தின் பிரபல்யமான இரு பாடசாலைகள் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் எதிர் வரும் 28.10.2015 திறந்துவைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கோ.ப.மேற்கு பாடசாலை பெற்றோர் சங்கம் பழைய மாணவர் சங்கம் மற்றும் சமுக அமைப்புக்கள் பள்ளி நிருவாகிகள் விளையாட்டு கழகங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கள் ஒன்றினைந்து இன்று அவசர கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது இதில் மேற்படி பாடசாலைகள் முன்னால் ஜனாதிபதி கௌரவ மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் மத்திய அரசாங்கத்திற் கூடாக கௌரவ அமீர் அலி அவர்களின் தீவிர முயற்சியால் நிதி ஒதுக்கப்பட்டு கௌரவ அமைச்சரினாலேயே அடிக்கல்லும் நடப்பட்டிருந்த வேளையில் சம்பந்தமில்லாத முதலமைச்சர் திறப்பு விழாவை பிரதேச கல்வியில் அக்கரை காட்டும் ஊரில் பிறந்த பிரதி அமைச்சர் ஒருவர் இருக்கும்போது அவர் கொண்டு வந்த பாடசாலைகளை அவரை புரக்கணித்து முதலமைச்சர் தன்னிச்சையாக முன்னெடுக்க முற்படுவது கண்டிக்க தக்க செயல் எனவும் இனிமேல் அப்படியான சூழு்நிலைகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்றும் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் உரிய இடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சாதகமான பதில் ஏதும் எட்டாத பட்சத்தில் 28.10.2015 கர்த்தால் ஒன்றை அனுசரித்து முதலமைச்சருக்கு தமது எதிர்ப்பை தெரிவிப்பதென ஏகமனதாக தீர்மாணம் எடுக்கப்பட்ட நிலையில் இது அமுல்படுத்தப்படுமானால் கோ.ப.மேற்கு பிரதேசங்களில் அமைதியற்ற சூழல் உருவாக வாய்பாகும் என பொதுமக்கள் பதட்டத்துடன் தெரிவிக்கின்றனர்