நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா அட்டன் பிரதான வீதியில் சிவனொளிபாதமலையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்று நோர்வூட் ரொக்வூட் தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
27.10.2015 அன்று காலை வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மலையகத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டமையால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து நேரிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கண்டி பகுதியிலிருந்து 26.10.2015 அன்று சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக சென்று மீண்டும் 27.10.2015 அன்று வீடு திரும்பும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடதக்கது.
இதில் 5 பேர் பயணித்துள்ளதாகவும், எவருக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.