Advertisement

Main Ad

நான் மரணித்தால் மாத்திரமே நாளை கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடை நிறுத்தப்படும் – கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் அவா்களின் கல்குடா பிரதேசத்துக்கான அபிவிருத்தி செயற்பாடு குறிந்தும், மேற்கொள்ளப்பட்ட அரச பணிகளையும்,சேவைகளையும் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நாளை புதன்கிழமை வெற்றிகரமாக கல்குடா பிரதேசத்தில் முன்னொடுக்கப்படும் என முதலமைச்சர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


புதன் கிழமை (28) முதலமைச்சர் ஓட்டமாவடி கல்வி கோட்டத்தில் உள்ள ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்,மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள தொழில் நுட்ப ஆய்வு கூட கட்டிடத்தை முதலமைச்சர் திறப்பது தொடர்பில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவா் சங்கம்,பிரதேச அபிவிருத்தி குழுக்கள் உள்ளிட்ட ,உள்ளுர் அரசியல் பிரமுகர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும் திட்டமிடப்பட்ட வகையில் 28.10.2015 புதன் கிழமை முதலமைச்சரின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னொடுக்கப்படும் என முதலமைச்சா் உறுதியாக தெரிவித்தார்.

முதலமைச்சரின் கல்குடா பிரதேச வருகை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சரிடம் வினாவிய போது ” நான் கல்குடா பிரதேசத்திற்கு நாளை புதன் கிழமை 28 விஜயம் செய்வது கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள பாடசாலைகளில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள தொழில் நுட்ப ஆய்வு கூட கட்டிடத்தை திறத்து வைப்பதற்காகவும் இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு செல்வதற்காகவும் பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் குறிந்து ஆராய்வதற்கவே நான் அங்கு விஜயம் செய்யவுள்ளேன். நன்மையை மாத்திரம் இதில் நான் கவனத்தில் கொண்டுள்ளேன்.

இதனை புதாகரமாக ஆக்கி அற்ப அரசியல் செய்வதற்கு நான் இடமளிக்க மாட்டேன் என தெரிவித்தார்.

என்ன எதிர்ப்புகள் வந்தாலும் நாளை கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னொடுக்கப்படும் நான் மரணித்தாலே தவிர அது இடை நிறுத்தப்படும் என குறிப்பிட்டார்.

மேலும் நான் அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்வது வாக்கு கேட்பதற்கும் அரசியல் செய்வதற்காகவும் அல்ல மக்களின் நியாயமான பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என நேரில் சென்று பார்வையிட்டு தீர்வுகளை கிடைக்க பெறச்செய்வேதே எனது நோக்கமாகும் என குறிப்பிட்டார்.