கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனக்கு வாக்களித்த தெஹியத்தக்கண்டி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் (27) அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது தனது வெற்றிக்காக அயராது பாடுபட்ட தெஹியத்தக்கண்டி பிரதேச மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இந்நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெஹியத்தக்கண்டி இணைப்பாளர் ரணவீர தலைமையில் தெஹியத்தக்கண்டி சாலீகா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் தெஹியத்தக்கண்டி இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.ரவூப், கொனாகொல்ல அதிவாசிகள் தலைவர் உருவாரிகே கலுபண்டா அத்தே, பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தெஹியத்தக்கண்டி பிரதேசத்திலுள்ள பொது மக்கள் தமது பிரதேச மற்றும் தனிப்பட்ட தேவைகள் குறித்த மகஜர்களை பிரதி அமைச்சரிடம் கையளித்தனர்.