மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 72 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றிய பின்னர் மெத்யூஸ் இதனைக் குறிப்பிட்டார்.
அப் போட்டியில் மிலிந்த சிறிவர்தன ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.
‘‘எமக்கு கிடைத்த அதி சிறந்த ‘புதுவரவு’ மிலிந்த ஆவார். அவர் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகல துறைகளிலும் பிரகாசித்தார்’’ என்றார் மெத்யூஸ்.
‘‘எமக்கு கிடைத்த அதி சிறந்த ‘புதுவரவு’ மிலிந்த ஆவார். அவர் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகல துறைகளிலும் பிரகாசித்தார்’’ என்றார் மெத்யூஸ்.
‘‘கடந்த இரண்டு மாதங்களில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவர் ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்போது டெஸ்ட் அரங்கில் நுழைந்து அதிலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் நேர்த்தியாக விளையாடினார்.
துடுப்பாட்டத்தில் அவர் தனது இயல்பான ஆற்றலை வெளிப்படுத்தினார். அவரது பந்துவீச்சும் கனி கொடுத்தது. இப்படியான ஒருவர் பந்துவீச தேவைப்பட்டது. பகுதிநேர பந்துவீச்சாளருக்கும் அப்பால் அவர் சிறந்தவர்'' என ஏஞ்சலோ மெத்யூஸ் கூறினார்.
இவர் 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் ஒரு சிறந்த சகலதுறை வீரர் என்பதை நிரூபித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் அறிமுகமாக சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய மிலிந்த சிறிவர்தன, மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் நெடுநாள் இலங்கை அணிகளில் நீடிப்பார் என நம்பப்படுகின்றது.
‘‘மத்திய வரிசையில் எமக்கு ஒரு துடுப்பாட்டக்காரர் தேவைப்பட்டார். அதனை ஈடுசெய்துள்ள மிலிந்த சிறிவர்தன, பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்திவருகின்றார். சுழல்பந்துவீச்சுப் பயிற்றுநர் பியால் விஜேதுங்கவிடம் அவர் நிறைய கற்றுக்கொண்டுள்ளார்‘‘ என ஏஞ்சலோ மெத்யூஸ் மேலும் தெரிவித்தார்.