ஜி.முஹம்மட் றின்ஸாத்
கடந்த மார்ச் மாதம் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த 32 கழக அணிகள் பங்குபற்றிய கடினபந்து கிரிக்கெட் போட்டிகள் மிக பிரம்மான்டமான முறையில் இடம் பெற்றிருந்தது.
அந்தவகையில் இத்தொடரில் இருதிபோட்டிக்கு ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகமும் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகமும் நாளை (14) 1.30 மணியளவில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளனர்.
இறுதிப் போட்டியிற்கு, பிரதான அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு. A.M. ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். அதோடு, கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான KMA. ரஸ்ஸாக் மற்றும் ILM. மாஹிர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஏனைய அதிதிகளாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தரங்க பரணவிதான மற்றும் ஸ்பீட் நிறுவனத்தின் விளையாட்டு உபகரணங்களை இலங்கைத் தீவு முழுவதும் விநியோகம் செய்யும் கஸானா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி M. அஸ்கர் அலி ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அனைவரும் வருக
அனைவரும் வருக
0 Comments