Advertisement

Main Ad

Maligaikadu Real Power விளையாட்டு கழகத்தின் 6வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய சீருடை அறிமுக விழாவும் சிநேகபூர்வ T20 கடின பந்து கிரிக்கெட் போட்டியும்



( ஜி.முஹம்மட் றின்ஸாத் )

நாபிர் பவுண்டேஷன் அமைப்பின் பிரதான அனுசரணையில் மாளிகைக்காடு றியல் பவர் விளையாட்டு கழகத்தின் 6வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய சீருடை அறிமுக விழாவும் சிநேகபூர்வ T20 கடின பந்து கிரிக்கெட் போட்டியும் 2017.07.21 ம் திகதி சாய்ந்தமருது பொது மைதானத்தில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஷ் றகுமத்துல்லாஹ் தலையில் விமர்சையாக இடம்பெற்றது.

இவ் சிநேகபூர்வ கடின பந்து கிரிக்கெட் போட்டியில் Maligaikadu Real Power விளையாட்டு அணியை எதிர்த்து சாய்ந்தமருது Brave Leaders விளையாட்டு கழகம் மோதின

இப்போட்டியில் சாய்ந்தமருது Brave Leaders விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது.

இப்போட்டிக்கு பிரதம அதிதியாக

நாபிர் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாக செயலாளரும், ECM Pvt Lmd நிறுவனத்தின் பொது முகாமையாளருமான A.H. அல்-ஜவாஹிர் (JP) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதியாக

றியல் பவர் விளையாட்டு கழகத்தின் முகாமையாளர் M.H.M.பெளஸர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.








Post a Comment

0 Comments