Advertisement

Main Ad

கல்முனை வலய சமாதானக் கல்வி அதிகாரி றசீனின் விசேட இப்தார் நிகழ்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

கல்முனை வலய சமாதானக் கல்வி அதிகாரியும், நிந்தவூர் முகையதீன் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளருமான எம்.ஏ.எம்.றசீன் அவர்களின் ஏற்பாட்டிலான விசேட இப்தார் நிகழ்வு சகோதரி றசீதா றிபாய் வளாகத்தில் இடம் பெற்றது.

முன்னாள் நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி கலாபூசனம் ஏ.எல்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் பிரதம அதிதியாகவும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் நிந்தவூர் முகையதீன் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ.எம்.ஹமீட், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபீக், ஆசிரிய ஆலோசகர் ஏ.இப்றாகீம், மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், உள்ளுர் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments