ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
வீடியோ - www.youtube.com/watch?v=HZMYlHohmnM
கல்முனை பிரதேசத்திற்கு மட்டுமல்லாமல் முழு அம்பாறை மாவட்டத்திற்குமே கல்வி துறையில் கிழக்கு வாசல் என பேசப்படும் கல்முனை சாகிறா தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒன்றியம் நேற்று 24.6.2017 சனிக்கிழமை நடாத்திய விஷேட இஃப்தார் நிகழ்வில் பிரதம அதீதியாக சமூக சேவைகள் அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும், பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் கலந்து சிறப்பித்தார்.
குறித்த இஃப்தார் நிகழ்விற்கு சாகிறா கல்லூரியில் பல வருடங்களாக கற்பித்து வெளியூர்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள், மற்றும் பதவி உயர்வழங்கப்பட்டு கடமையாற்றுகின்ற உயர் அதிகாரிகள், ஓய்வூதியம் பெறுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள், தற்பொழுது கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள், கல்விமான்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு ஏனைய பாடசாலைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், முன்மாதிரியகவும் எல்லோரும் இஃப்தாரில் கலந்து கொண்டமையானது உண்மையில் நானும் அந்த பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவன் என்ற வகையில் பெருமை அடைய கூடிய விடயமாக இருந்தது.
மேலும் காலாகாலமாக கல்முனை பிரதேசத்தில் பாரளுமன்ற பிரதி நிதித்துவங்கள் இருந்து வருகின்ற போதிலும் இன்னும் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பல பெளதீகவள குறைபாடுகள் கல்லூரியில் இருக்கின்றமை கவலை அளிக்க கூடிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது. அந்த அடிப்படையில் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீரிடம் பாடசாலை நிருவாகத்தினால் விடுக்கப்பட்ட சில வேண்டுகோள்களுக்கு அமைவாக மிக விரைவில் அவ்வாறான குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்து தருவாக நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் உதுமான்கண்டு நாபீரினால் பாடசாலை நிருவாகத்திடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆசிரியர் ஒன்றியத்தின் இஃப்தார் நிகழ்வின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

0 Comments