சுவிஸ் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஏற்பாட்டில் எதிர்வரும் 09.07.2017 ஞாயிறன்று மதியம் 02.30க்கு சுவிஸ் சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich என்னுமிடத்தில் புளொட்டின் "28ஆவது வீரமக்கள் தினம்" அனுஷ்டிக்கப்பட உள்ளதென்பதை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு இத்தால் அறியத் தருகின்றோம்.
மேற்படி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு, மலரஞ்சலி, மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் வினோதவுடைப்போட்டி, நடன நாட்டியங்கள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
**** அன்றையதினம் (09.07.2017) காலை 08.30க்கு இதே மண்டபத்தில், (சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich என்னுமிடத்தில்) தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான பரீட்சையும் நடைபெறவுள்ளது.
**இப் பரீட்சைக்கு இதுவரையில் தங்களைப் பதிவுசெய்யாத பிள்ளைகள் குறித்த நிகழ்வு இடம்பெறும் அன்று காலை 08.00 மணிக்கு நேரடியாகவே அங்கு வருகை தந்து, தம்மைப் பதிவு செய்துவிட்டு மேற்படி பரீட்சையில் கலந்து கொள்ள முடியுமென்பதையும் அறியத் தருகின்றோம்.**
அன்று (09.07.2017) பிற்பகல் 02.30க்கு நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
(தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் "வீரமக்கள் தினம்" வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.)
"விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறம் சேர்ப்போம்"
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) சுவிஸ்.
*** தொடர்புகளுக்கு...
077.9485214 // 077.9591010 // 076.5838410 // 078.9167111 // 077.9677803
0 Comments