(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் மலர்ச்சாலை ஒன்றினை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 25.06.2017 அன்று காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இவ்வார்பாட்டம் கொட்டகலை பழைய மலர்சாலைக்கு அருகாமையில் ஆரம்பமாகி கொட்டகலையில் திறக்கப்படவுள்ள புதிய மலர்ச்சாலையை வரை பதாதைகளை ஏந்தியவண்ணம் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் பழைய மலர்ச்சாலையினையும், புதிய மலர்சாலையினையும் நகரை விட்டு வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லுமாறு வலியுறத்தியுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டகலை நகரில் மலர்ச்சாலை வேண்டாம், மலர்சாலை அகற்று, புனித நகரை மாசுப்படுத்தாதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை காட்சிபடுத்தி ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இன்று கொட்டகலை நகரில் பல்வேறு சமயத்தலங்கள் அமைந்துள்ளன. இதில் அடிக்கடி விழாக்களும் உற்சவங்களும் இடம்பெறுவதனால் மலர்ச்சாலையில் பிரதேங்கள் வெட்டப்படுவதனால் இது சமய விதிமுறைகளுக்கு மாறாக அமைவதோடு, மனித எச்சங்களால் சூழல் பாதிப்பும் ஏற்படுவதோடு நோய்வாய்ப்படவும் இது காரணமாக அமையும் எனவே இருக்கின்ற மலர்சாலையினையும் புதிதாக திறக்கவுள்ள மலர்ச்சாலையும் சன நடமாற்றம் காணப்படுகின்ற இடமான கொட்டகலையிலிருந்த அகற்றி மயாணப்பகுதியில் அல்லது சுரங்வழிப்பாதைக்கு அப்பால் அமைத்து கொல்லுமாறு இவர்கள் வழியுறுத்துகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சர்மத தலைவர்கள் உட்பட நகரின் வர்த்தகர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments