செய்தி அனுப்புனர் - அஷ்ரஃப் முகம்மது - ஏறாவூர்
அப்துல் கலாம் - ஒருசரித்திரநாயகன்
சில நாட்களாக ஒருவர் குறித்து உலகெங்கும் அதிகமாகப் பேசப்படுகின்றது. இன,மத,பிரதேச,மொழிகடந்து அனுதாபங்களும் வியப்புரைகளும் குவிந்து கொண்டிருக்கின்றன. யார் இவர்? ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
எத் துறைசாதனைக்காக பிரபல்யமானார்? எதைச் சாதித்ததாக உணர்கின்றார்? எதை விட்டுச் சென்றுள்ளார்? என்பதை அறிந்தால்,அதுஅப்துல் கலாமெனும் மாமனிதனை அடையாளமிடுவதனைக் காணலாம்.
பிறப்பு–
அப்துல் கலாம் 1931.08.15இல் தமிழ் நாட்டின் இராமேஸ்வரத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியினை சொந்தஊரிலேயே தொடங்கியதுடன், குடும்ப வறுமைகாரணமாக படித்துக் கொண்டே செய்தித்தாள் விநியோகிக்கும் தொழிலிலும் ஈடுபட்டார்.
கணிதத் துறையில் ஆர்வம் கொண்டகலாம், 1954 இல் திருச்சிசென்ஸ்ட் ஜோசப் கல்லுரியில் இயற்பியலில் பட்டமும் பெற்றார்.
பின்னர்,சென்னை தொழில்நுட்பக்கல்லுரியில் விண்வெளிபொருளியல் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர், நாஸா,கோடார்ட்,வால்லோப்ஸ் ஆகிய ஆய்வுமையங்களுக்கு சென்று,புதியஅறிவு,அனுபவங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
விஞ்ஞானியாக…
பட்டப்படிப்பினை நிறைவு செய்ததும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் இணைந்து தனது பணிகளை ஆரம்பித்தார் கலாம். முதலில். இந்திய இராணுவத்துக்காக வானூர்தி ஒன்றினை தயாரித்தார். தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்து செயற்கைக் கோள் பாய்ச்சும் இயந்திரத்தைத் தயாரித்தார்.
அணு ஆயுத வடிவமைப்பு,வளர்ச்சி மற்றும் சோதனைத்தள முன்னேற்பாடு ஆகியவற்றுக்கு பெரும் பங்காற்றினார். புன்னகைக்கும் புத்தன்,ரோகினி செயற்திட்டம்,டெவில் செயற்திட்டம் மற்றும் ஒன்றிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத்திட்டம் என்பவற்றுக்கு தலைமை வகித்துச் செயற்பட்டு வெற்றிகரமானதாக்கினார்.
அக்னி ஏவுகணை,ப்ரித் விகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை,பொக்ரான் அணு ஆயுத சோதனை என்பன கலாமை மேலும் உயர் மட்ட விஞ்ஞானியாக உயர்த்திக் காட்டியது.
குடியரசுத் தலைவராக…
தனது ஆய்வுப் பணிக்கப்பால்,நாட்டின் தலைவராகவும் நாகரீகமானஅரசியல் அணுகு முறைகளும் கொண்டவராககலாம் விளங்கினார். இதன் பயனாக, 25.07.2002 – 25.07.2007 வரை குடியரசுதலைவராக பதவிவகித்தார். இக்காலப் பகுதியில் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் சென்றுவரும் தளமாகமாற்றினார். இதனால் மக்களின் ஜனாதிபதி என்று அன்பாக அழைக்கப்பட்டார். தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கும் வாய்ப்புக்கள் இருந்தும் அதிலிருந்து விலகி இன்னொருவருக்கு வாய்ப்பளித்தார்.
தலைமை நிருவாகியாக…
குடியரசுத் தலைவராக மட்டுமல்லாது, உள்நாட்டு செயற்கைக் கோள் பாய்ச்சல் வாகனத் தயாரிப்புதிட்டத்தின் பிரதான திட்ட இயக்குனராகவும் பிரதமரின் பிரதான தலைமை ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் செயலாளராகவும் அரசதலைமைத் திட்ட நிருவாகியாகவும் கடைமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
திட்ட வரைவாளராக…
கலாம். தலைமை நிருவாகியாகவும் திட்ட வரைவாளராகவும் இருந்திருக்கின்றார். முழு இந்தியாவுக்குமான வல்லரசுத் திட்டம் - 2020 இன் மூலமாக அவரது திட்டவரைவிற்கான அறிவினை மதிப்பிடக் கூடியதாகவுள்ளது. 2020 இல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்பதற்காக 20 வருடங்களுக்கு முன்னரே திட்டங்களை முன்மொழிந்தார்.
இதில் இளைஞர்களது பங்கு அதிகம் இருக்கவேண்டும் என்றும் வழியுறுத்தினார்.
விரிவுரையாளராக…
கலாம், தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான இடமாக பாடசாலைகள்,கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்தார். இதனால்,மரணிக்கும் வரை ஒரு விரிவுரையாளராகவே இருந்தார். இவரின் இறுதிக்காலத்தில்,அகமதாபாத் மற்றும் இந்தோரிலுள்ள இந்திய மேலான்மை நிருவனங்களின் வருகைப் பேராசிரியராகவும் இந்திய விண்வெளிஅறிவியல் மற்றும் தொழில்நுட்பநிறுவனத்தின் அதிபராகவும் சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியராகவும் மைசூர் மற்றும் சோமாலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களின் வருகை விரிவுரையாளராகவும் இருந்துள்ளார்.
கருத்தாளராக…
கலாம்,சிந்தனை வாதியா கமட்டுமல்லாது, சிந்தனையைத் துண்டக்கூடிய நல்ல கருத்துக்களைச் சொல்பவராகவும் அதன் வழியாக எல்லோரையும் கவரும் ஒருவராகவும் இருந்தார். இளைஞர்களை கனவு காணச் சொல்லி இலக்குகளும் இலட்சியங்களும் கொண்டவர்களாக மாற்ற முனைந்தார்.
அவரின் இறுதிப் பகுதியில் இளைஞர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதனையேமிகப் பெறுமதியானதாகவும் கருதினார். அவரின் ஒவ்வொரு கருத்துக்களும் அறிவுச் சொட்டுக்களாகவும் உத்வேகமும் கொண்டதாகவும்அமைந்துள்ளன.
கலைஞராக…
இது மட்டுமல்லாது, கலாம் நல்லகலைஞராகவும் இருந்திருக்கின்றார். கவிஞராக,எழுத்தாளராக,படைப்பாளராக, நூலாசிரியராக மற்றும் வீணை இசைப்பாளராக என்றுஅவரின் கலைத்துவப் பணியும் குறித்துக்காட்டத்தக்கது. ஒன்பது நூல்களை எழுதியுள்ள கலாம், பலரது வாழ்க்கை சரித்திரங்களுடன் தொடர்பு பட்டவராகவுமுள்ளார்.
நல்லமனிதராக…
கலாம். நல்ல மனிதராக தன்னைஅடையாளப்படுத்தினார். சீரிய சிந்தனையில் இளைஞர்களை வழிநடாத்தினார். ஊழல் மோசடிக்கு எதிராககுரல் கொடுத்தார். அடக்கு முறை, ஓரம் கட்டுதல், புறக்கனித்தல் களுக்கு எதிராகதுனிந்துநின்றார். வேற்றுமைக்குள் ஒற்றுமையை நடைமுறைப்படுத்தி நாட்டுப்பற்றாளனாக தன்னை நிலைநிறுத்தினார். உயர்ந்த உள்ளத்துடனும் எண்ணத்துடனும் எல்லோரையும் அரவணைத்தார்.
இவர் குறித்த விமர்சனமென…
• தனிப்பட்டவாழ்க்கை,குடும்பவாழ்க்கை,திருமணம் குறித்துமாற்றுக் கருத்து கொண்டிருந்ததாக விமர்சிக்கப்பட்டார்.
• ஆன்மீகரீதியான கருத்துக்களுடன் முரண்பட்ட, தன்னை பொது நலவாதியாககாட்டிக் கொள்ள முயற்சித்தாக விமர்சிக்கப்பட்டார்.
• அணு வாராய்ச்சியின் தந்தை என்று கூறுமளவுக்கு மிகைத்த அறிவு இவரிடம் இல்லையென சகஆய்வாளர்களினாலேயே விமர்சிக்கப்பட்டார்.
• செல்வாக்குமிக்க மனிதராக இருந்தும், தனது குடும்பத்தினருக்கு எவ்விதமான வசதிவாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டார்.
ஆனாலும் முக்கியத்துவம் பெற்றார்
மனிதநேயத்துடன்,வேறுபாடுகளுக்கப்பால் பொது நலவாதியாக தன்னைஅடையாளப்படுத்தியதனால்…
ஆன்மீகத்துக்கப்பால்,தன்னை நட்டுப்பற்றாளனாக அடையாளப்படுத்தியதனால்…
ஒரு துறையில் மட்டுமல்லாது, பிரபல்யமான எல்லாத் துறையிலும் காலுன்றிபிரபல்யமானதால்…
சாத்திய மற்றது என கருதிய அணுவாய்வினை இந்தியாவுக்கு சாத்தியமாக்கி,உலகைவியக்கச் செய்தமைக்காக
…
மாணவர்கள், இளைஞர்கள் மீதுஅதிகஅக்கறையுடன் உற்சாகமூட்டும் வழிகாட்டலைவழங்கியமைக்காக…
அதனால் இன்று…
உலக நடுகளினாலும் சமூக,கல்விசார் அமைப்புக்களினாலும் ஆய்வு நிறுவனங்களினாலும் பாராட்டி கௌரவிக்கப்படுகின்றார் கலாம். இவரின் சிந்தனைகள் இந்தியாவுக்கு வெளியிலும் (குறிப்பாக தென்கொரியாவில்) அதிக முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகின்றன.
கலாம் அவர்களுக்கு 30 பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்கிகௌரவித்துள்ளதுடன், இந்தியஅரசின் உயர் விருதான பாரதரத்னா,பத்மவிபூசன்,பத்மபூசன், இந்ராகாந்திவிருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். இவரின் சர்வதேசமுக்கியத்துவத்தை உணர்ந்த ஜக்கியநாடுகள் சபை, இவரின் பிறந்ததினத்தை சர்வதேச மாணவர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும்.
செய்தி அனுப்புனர் - அஷ்ரஃப் முகம்மது - ஏறாவூர்