Advertisement

Main Ad

அமீன் ஞாபகர்த்த உதைப்பந்தாட்ட கிண்ணத்தினை ஏறாவூர் YSSC சுவீகரித்தது..(வீடியோ).,


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்


வீடியோ இறுதி போட்டியின் நிகழ்வு:-
www.youtube.com/watch?v=1I_TPLPBRyc&feature=youtu.be

சுமார் ஒரு மாதகாலமாக வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை வேல்ட்ஸ்ட்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் இன்று 26.05.2017 வாழைச்சேனை வீசி பொதுமைதானத்தில் களமிறங்கிய வேல்ட்ஸ்ட்டார் விளையாட்டு கழகத்தினை எதிர்த்தாடிய ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சீ விளையாட்டு கழகம் ஐந்துக்கு பூச்சியம் எனும் கோல் கணக்கில் இலகுவாக அமீன் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டது.

குறித்த சுற்றுப்போட்டிக்கு முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் கல்குடா தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாட்டோ வை.எல்.மன்சூர் பூரண அனுசரணை வழங்கியிருந்ததோடு, ஓட்டமாவடியில் உள்ள பிரபல அக்கீல் வர்த்தகதளமும், ஹசீனா ஹார்ட்வெயார், அல்-கிம்மா நிறுவனம், ஆகியன இணை அனுசரணையினை வழங்கியிருந்தது. அத்தோடு சாம்ப்யனை சுவீகரித்த ஏறாவூர் YSSC கழகத்திற்கு 15000 ரொக்க பணத்துடன் பெறுமதிமிக்க வெற்றிக்கிண்ணம் அக்கீல் வியாபார தளத்தினால் வழங்கி வைக்கப்பட்டதோடு, இரண்டாம் இடத்தினை பெற்ற வேல்ட்ஸ்ட்டார் விளையாட்டு கழகத்திற்கு 10000 ரொக்க பணத்துடன் பெறுமதிமிக்க வெற்றிக்கிண்ணமும் சாட்டோ மன்சூரினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு பிரதம அதீதியாக முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் கல்குடா தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் லியாப்தீன்,வை.எல்.மன்சூர் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பெரும்திரளான உதைப்பந்தாட்ட ரசிகர்களும் கலந்து சிறப்பித்தனர். இறுதி போட்டி நிகழ்வின் காணொளி இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments