Advertisement

Main Ad

சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் சமேளத்தினால் நடத்தப்பட்ட பிரம்மான்டமான விளையாட்டு போட்டி

( ஜி.முஹம்மட் றின்ஸாத் )

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் 29வது தேசிய விளையாட்டு போட்டியின் பிரதேச விளையாட்டு மட்ட போட்டிகள் கடந்த 21.05.2017 (ஞாயிறு) அன்று இறுதி நாள் விளையாட்டு போட்டிகள் சாய்ந்தமருது பௌசி கடற்கரை மைதானத்தில் சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் சமேளத்தினால் நடத்தப்பட்டது. 


இந்த விளையாட்டுப்போட்டியானது சுமார் 5 வருடங்களின் பின்னர் மிக பிரம்மான்டமான முறையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் 29வது தேசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் , உதைபந்தாட்டம் , குண்டு எறிதல் , பரிதிவட்டம் வீசுதல் , 4 x 400 m , 4 x 100 m , 1500m , 100m  என பல போட்டிகள் இடம்பெற்றன.


கிரிக்கெட் போட்டில் சாய்ந்தமருது இல்ஹாம் இளைஞர் கழகம் வெற்றிபெற்றதோடு , உதைபந்தாட்டத்தில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் இளைஞர் கழகம் வெற்றிபெற்றது. 


இந்த விளையாட்டு போட்டிகள் யாவும் சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் சமேளத்தின் தலைவர் தானிஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.


இதனோடு இந்த விளையாட்டு விழாவை சிறப்பாய் நடாத்தி முடிப்பதர்க்கு முன்நின்று செயற்பட்டிருந்தார் அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜீத் அவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.


அந்த வகையில் இந்த விளையாட்டு விழுாவுக்கு பிரதம அதிதியாக 


அதீப் பவுண்டேஷன் உடைய தலைவரும் பிரபல தொழில் அதிபருமான முஹர்ரம் பஸ்மிர் அவர்களும் 


கௌரவ அதிதியாக 


சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் அதிகாரி ஜெஃபர் அவர்களும் , அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜீத் மற்றும் கல்முனை தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் தில்ஷாத் மற்றும் சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் சமேளத்தின் தலைவர் தானிஸ் அவர்களும் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி லத்தீப் ,பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அஸீம் அவர்களும் 


விசேட அதிதியாக 


முஸ்லிம் இளைஞர் சமுக ஆய்வு அமைப்பின் தலைவரும் , சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் சமேளத்தின் பிரதி தலைவர் இஸ்மாயில் இக்தார் அவர்களும் 


சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் சமேளத்தின் உருப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தித்தனர்.


அதனோடு  போட்டிகளில் வெற்றிபெற்ற அனைத்து இளைஞர் கழகங்களுக்கும் கிண்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு அதிதிகளுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டது.









Post a Comment

0 Comments