Advertisement

Main Ad

தென்கொரிய கடலில் மூழ்கிய கப்பலின் கெப்டன் கைது


தென்கொரிய கடலில் மூழ்கிய கப்பலின் கெப்டன் கைதுதென்கொரியாவில் கடந்த புதன்கிழமையன்று 475 பேருடன் கடலில் மூழ்கிய கப்பலின் தலைமை கெப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கப்பலின் நிர்வாகம், விபத்திற்கான ஆதாரங்களை அழித்திருக்கலாம் என்பதை மேற்கோள்காட்டிய  தென் கொரியாவின் உள்ளூர் நீதிமன்றம், விபத்திற்குள்ளான கப்பலின் கெப்டன் லீ ஜூன் சியோக்  (Lee Joon-seok ) மற்றும் இரண்டு  2 உதவி கெப்டன்களையும் கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதனைடுத்து கெப்டன் லீ கைது செய்யப்பட்டு பொலிஸாரின்  கட்டுப்பாட்டில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் மீது , பணியில் அலட்சியமாக இருத்தல், கடல்சார் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக  தென் கொரியாவின் யான்ஹேப் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கப்பல் தலைவன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
தனது நிலையை எண்ணி வெட்கப்படுவதாகவும், அவர் இதன் போது குறிபபிட்டுள்ளார்.
இதேவேளை மூழ்கிய இந்தக் கப்பலில் இருந்து உயிரோடு காப்பாற்றப்பட்டிருந்த  ஆசிரியர் ஒருவர்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த அனர்த்ததில் 28 பேர் உயிரிழந்திருப்பது  இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 270 பேரின் நிலை தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.