Advertisement

Main Ad

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிகளை நிறுத்துகிறது அவுஸ்திரேலியா


மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிகளை நிறுத்துகிறது அவுஸ்திரேலியாகாணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் சென்று தேடும் பணிகள் கடந்த 7 வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் எவ்வித பலனும் கிட்டவில்லையென்பதால் எதிர்வரும் 5 முதல் 7 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
239 பயணிகளுடன் மார்ச் மாதம் 8 ஆம் திகதி காணாமல் போன எம் எச் 370 விமானம் தொடர்பில் இதுவரை எந்த வித தகவல்களும் வெளியாகவில்லை.