ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்தவர் ஸ்டெபி ஹிஸ்டால். இவர் தன் வீட்டில் 120 செ.மீ நீளம் கொண்ட பூனை ஒன்றை வளர்த்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் இந்த பூனையின் பெயர் ஒமர். 120 செ.மீ நீளம் வளர்ந்து உலகின் நீண்ட பூனையாக கின்னஸ் சாதனை படைக்க உள்ளது. தற்போது 118 செ.மீ உள்ள பூனையே உலகின் நீண்ட பூனையாக உள்ளது.
இந்த் பூனைக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு உள்ளது. இந்த பூனையை 8 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்
இது குறித்து பூனையின் உரிமையாளர் ஹிஸ்ட் கூறுகையில்,
இதனை முதன் முதலில் வாங்கும் போது சாதாரண பூனையின் எடை தான் இருந்தது. ஒமர் 5 மணிக்கு எழுந்துவிடும், சிற்றுண்டியாக இரண்டு மூன்று தேக்கரண்டி உலர்ந்த பூனை உணவு மற்றும் பச்சை கங்காரு கறியை உண்ணும். வீட்டைச் சுற்றி வரும், புழக்கடையில் எகிறி குதித்து விளையாடும், மேசை மீது சிறு தூக்கம் போடும்.
மேலும் 14 கிலோ எடையுள்ள ஒமரை தூக்குவது சிரமமாக உள்ளதால், விலங்குகள் நல மருத்துவர்களிடம் கூட்டிச் செல்லும் போது நாய்களுக்கான கூண்டை பயன்படுத்த வேண்டியுள்ளது எனவும் மெத்தையில் ஒமருக்கு அதிக இடம் தேவைப்படுவதால் அவனை உறங்கும் அறைக்கு வெளியே பூட்ட வேண்டியுள்ளது எனவும் என தெரிவித்தார்.
0 Comments