Advertisement

Main Ad

கன மழையால் பூமியின் மேற்பரப்பை போன்று மாறிய செவ்வாய் கிரகம் ஆய்வில் தகவல்


சுமார் 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது, உயிரினங்களும் வாழ்ந்துள்ளன.

அதன்பின் செவ்வாய்கிரகத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதிய காரணத்தினால் அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என நம்பப்பட்டு வருகின்றது.

இதற்கான சான்றாக இன்றும் செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதிய சுவடு காணப்படுகின்றது. இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிதம் பூமியை வந்தடைந்தன கூறப்படுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகள் 1984இல் அண்டார்டிக்காவில் Allan Hills 84001 (ALH84001) என்ற 1.95kg எடை கொண்ட விண்கல்லை கண்டெடுத்தார்கள். இது செவ்வாயில் ஏற்பட்ட மோதலினால் சிதறி பூமிக்கு வந்த கற்களில் ஒன்றாக இருக்கலாம் என யுகித்தனர். 1996-ல் நாசா விஞ்ஞானி டேவிட் மெக்கி  என்பவர் இதில் “நானோ பாக்டிரியாவின்” எச்சம் இருப்பதை கண்டறிந்தார்.

இதை தொடர்ந்து செவ்வாய்கிரக ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. மனிதர்களாகிய நமக்கு செவ்வாய் கிரகம் தான் அடிப்படை என பல விஞ்ஞானிகள் தீர்க்கதனமாக நம்புகின்றார்கள். இதை தொடர்ந்து செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட தொடங்கின.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5–ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மங்கள்யான் விண்கலம் 2014 செப்டம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை அந்த கிரகத்துக்கு அனுப்புகின்றன. அதற்கான விண்கலம் இன்று அனுப்பபடுகிறது.அக்டோபர் 19-ம் தேதி அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். .  

செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது நாசா.

இன்றளவும் நாசாவின் ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் தேடிக்கொண்டிருப்பது தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் மற்றும் ஆதாரங்களையும் தான். அவ்வாறான நிறைய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றாலும் அதனை பற்றிய முழுமையான தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர் நாசா.

செவ்வாய் கிரகத்தை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளப்படும் காலம்  687 நாட்கள். பூமியின் நிலப்பகுதியும் (Land mass) செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியும் கிட்டத்தட்ட சமம் தான்.

சூரிய குடும்பத்தில் இருக்கும் மலைகளிலேயே மிக உயரமான மலை செவ்வாய் கிரகத்தில் தான் உள்ளது. பெயர் : ஒலம்பஸ் மோன்ஸ் (Olympus Mons) உயரம் : 21 கிமீ

சூரியக் குடும்பத்தில் மாபெரும் தூசி புயல்களை உள்ளடக்கியதும் செவ்வாய் கிரகம் தான். அவைகள் மாதக்கணக்கில் ஒட்டுமொத்த கிரகத்தையும் சூழ்ந்து வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.

மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரக்தில் இருந்து கழிந்த பகுதிகள் பூமியில் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலைநாட்டவர்கள் ரோமானிய நாட்டு போர் கடவுளின் பெயரை தான் செவ்வாய்க்கு சூட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனி கோள் அதாவது சாட்டர்ன் கிரகத்திற்கு இருப்பது போன்ற 'ரிங்', செவ்வாய் கிரகத்திற்கும் உருவாகும். ஆனால் அதற்கு 20 - 40 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் உள்ள இடைவெளி  54.6 மில்லியன் கிமீ.

சூரியனில் இருந்து தோன்றிய 4 வது கிரகமான செய்வ்வாய் பூமி மற்றும் நிலா போன்ற புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ளது.

சமீபத்தில் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் பெய்த கடுமையான மழை காரணமாக சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தை மாற்றியமைத்திருக்கலாம் என ஆய்வு செய்து கண்டறிந்து உள்ளனர்.அவர்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில்  பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆறுகளை போல் உள்ள சேனல்களை கண்டறிந்து உள்ளனர்.

பூமியின் மேற்பரப்பை போன்று செவ்வாயின் மேற்பரப்பு  கடின தனமையுடன் மாறி உள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபர்ட் க்ராட்காக் மற்றும் ரால்ப் லாரன்ஸ் விஞ்ஞானிகள்  செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் செய்த மழையை அதன் மேற்பரப்பை மற்றகாரணம் என கூறுகின்றனர்.  

கடின மழையால் பூமியின் மேற்பரப்பை போன்று மாறிய செவ்வாய் கிரகம் ஆய்வில் தகவல் 

Post a Comment

0 Comments