Advertisement

Main Ad

GSP பிளஸுக்கும் ஓரின சேர்க்கையாளர்கள் கொடியேற்றத்துக்குமிடையில் தொடர்புள்ளதா ?



இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் கிடைத்துள்ளதாக  அரசாங்கம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ள இந்த தருணத்தில் இலங்கை பிரித்தானிய தூதரகத்தில் ஓரினசேர்க்கை உரிமைக்கான கொடி ஏற்றப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரது ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் கிடைத்துள்ளதாக  அரசாங்கம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ள இந்த தருணத்தில் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் அந்த நாட்டு தேசிய கொடிக்கு அருகில் ஓரின சேர்க்கையாளர்கள் கொடி ஏற்றப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் இலங்கையில் ஓரினசேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்குவதற்குமான பல திட்டங்களுக்கு பிரித்தானிய தூதரக அலுவலகம் உதவியுள்ளதாக தகவல் உள்ளது.

இந்த ஓரினசேர்க்கை கொடி ஏற்பட்டமை தொடர்பில் பிரித்தானிய தூதரக அலுவலகத்தினால் டுவிட்டர் பதிவொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் உலகளவில் உள்ளன. உலகளாவிய சகிப்புத்தன்மை மற்றும் பாகுபாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.ஓரினசேர்க்கை மக்களுக்கு குறைந்தது அல்ல என இலங்கை பிரித்தானிய தூதரக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளமை பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது என அவரது ஊடக பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கலாசாரத்தை சீரழிக்கும் ஐரோப்பாவின் இதுபோன்ற கோரிக்கைகளுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ  தலைசாய்க்காமல் இருந்த காரணத்தினால் ஜீ எஸ் பி பிளஸ் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டடது என அவரது ஊடக பிரிவுஅனுப்பியுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments