பிரான்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் விண்வெளி மருத்துவம் மற்றும் உடலியலின் ஆராய்ச்சியாளர்கள் எந்த வேலையும் செய்யாமல் கிட்டத்தட்ட 3 மாத காலம் துங்கிக் கொண்டே இருப்பவர்களிடம் இருக்கும் நுண்ணுயிரிகளின் விளைவுகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக தேடி வருகின்றனர். அந்த வேலைக்காக சம்பளமாக 16 ஆயிரம் யூரோப் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.11.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள், மனித உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதனின் எடையற்ற தன்மையை மீண்டும் புதுப்பித்தல் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக படுக்கையில் கிட்டதட்ட 3 மாதம் தூங்கிக்கிட்டே இருப்பவர்களை தேடி வருகின்றனர்.
மூன்று கட்டமாக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. முதலில் இரண்டு வாரங்கள் தொடர்ந்து பரிசோதனையும் மற்றும் அளவீடுகளும் மேற்கொள்ளப்படும். அதன் பிறகு தொடர்ந்து 60 நாட்கள் படுக்கையில் ஆராய்ச்சியும், கடைசி இரண்டு வாரங்கள் மறுவாழ்வு மற்றும் உடல் மீட்பு சோதனையும் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ரெடியாகும் ஒருவர், படுக்கையில் படுக்கும்போது, ஆறு டிகிரிக்கு தலை கீழே சாய்ந்து இருக்க வேண்டும்.தோள்பட்டையின் ஒரு பகுதி படுக்கையில் படும்படி இருக்க வேண்டும்.
தொடர்ந்து 60 நாட்கள், சாப்பிடுவதும், வாஷிங் பண்ணுவதும், தினந்தோறும் செய்யும் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் படுத்துக்கொண்டே செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு தகுதியானவர் ஆண்கள் மட்டுமே. அதுவும் அவருகு எந்த புகைப்பழக்கமும் இருக்கக் கூடாது. அவர் 20 முதல் 45 வயதை நிரம்பியவராகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். முற்றிலும் அலர்ஜி இல்லாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். 20 முதல் 27 வரை தான் உடை நிறை குறியீடு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments