Advertisement

Main Ad

பொதுமக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்ட கொங்றீட் வீதி - சுகாதார அமைச்சர் திறந்து வைப்பு


சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சு வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு கிராமம் 15 ஆயிரம் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ரூபா 1 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட அட்டாளைச்சேனை ஆலங்குளம் கிராம பள்ளி வீதியை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்குமாக இன்று (07) கையளித்து வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்குமாக கையளித்தும் வைத்தார்.

கடந்த பல வருடங்களாக அரசியல் அதிகாரத்தில் இருந்துவந்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரிடம் இவ்வீதி தொடர்பான பல கோரிக்கைகளை ஆலங்குளம் கிராமத்திலுள்ள பொதுமக்கள் முன்வைத்து வந்ததும்கூட இவ்வீதி அமைக்கப்பட்வில்லை எனவும் அன்மையில் சுகாதார அமைச்சராக பதவியெற்ற ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் இவ்விடயத்தை தெரியப்படுத்திய பின்னரே இவ்வீதி கொங்கிறீட் வீதியாக அமைக்கப்பட்டு இன்று அவரினால் திறந்து வைக்கப்பட்டு எங்களின் பாவனைக்கு கையளித்து வைத்தார் எனவும் அக்கிராம பொதுமக்களினால் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.