Advertisement

Main Ad

நடுவீதியில் தீப்பற்றிய கார்...( படங்கள் )


அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரஞ்ஜுராவ என்னும் இடத்தில் நடு வீதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இவ்விபத்து 06.12.2015 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் இல்லை என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் பகுதியில் இருந்து மொரட்டுவை பகுதியை நோக்கி சென்ற இந்த கார் கினிகத்தேனை ரஞ்ஜுராவ பகுதியில் வைத்து திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இவ்வாறு தீப்பற்றியதற்கான காரணத்தை கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

எனினும் இந்த கார் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக பல மணி நேரம் அட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிப்படைந்திருந்தது.