பொருளாதார காரணங்களுக்காக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் என வெளியாகும் தகவல்களை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நிராகரித்துள்ளார்.
செலவீனக் குறைப்பை மேற்கொள்ள இதனை ஏன் அனுமதிக்க கூடாது என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்தபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மொத்த உற்பத்தியில் வடக்கு மாகாணம் நான்கு வீதமும் கிழக்கு மாகாணம் ஆறு வீதமும் பங்களிப்பு செய்வதன் அடிப்படையில் இந்த கேள்வி தொடுக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய தருணத்தில் அனைத்து இனங்களையும் மதங்களையும் ஒன்றுபடுத்த முயற்சிக்க வேண்டும் என ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தேசிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு ஆகியவற்றுக்கான உதவி வழங்குநர் மாநாட்டில் பங்கேற்பதற்கு ஜப்பான் முன்வந்துள்ளதாகவும் இந்த மாநாடு அடுத்த ஆண்டு ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.