பாடசாலை சீருடை வழங்குவதில் சுமார் 500 மில்லியன்ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை சீருடைகள் விநியோகிப்பதில் ஆரம்பத்திலிருந்து மோசடி இடம்பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
வர்த்தகர்கள் சிலர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை இல்லாது செய்யும் நோக்கில் வவுச்சர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாவும், பாடசாலை விடுமுறைக்கு முன்னர் பெற்றோர் மாணவர்களின் தேர்ச்சி அறிக்கையினை பெறுக்கொள்வதற்கு வரும் சந்தர்ப்பத்தில் வவுச்சர்களை வழங்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.