மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் ஓட்டமாவடி அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலைக்கு அஹதிய்யா பாடநெறி தொடர்பான பாட புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.
இதனை கையளிக்கு நிகழ்வு 2015.11.30ஆந்திகதி திங்கட்கிழமை அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலையின் அதிபரும், கோறளைப்பற்று மேற்கு கோட்ட பாடசாலைகளின் சுற்றாடல் ஆணையாளருமான ஜனாப். M.L.M. பைஸல் ஆசிரியர் அவர்களிடம் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் பொருளாளர் ஜனாப். K.R.M. றாஸி, உப பொருளாளர் M.S. வாஸில் றஸீன் மற்றும் உப செயலாளர் J.M. பாஸித் ஆகியோரினால் அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.