நாவிதன்வெளி 6ஆம் கிராமத்தில் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து இளைஞர் சிரம சக்தி வேலைத் திட்டத்தின் கீழ் 6ஆம் கிராமம், சாளம்பைக்கேணி-02 மிலேனியம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் பழைய வேக்கரிக்கு முன்பாக பஸ் தரிப்பிட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (30) நடைபெற்றது.
நாவிதன்வெளி இளைஞர் சேவைகள் அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், சம்மாந்துறை தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.லிகிர்தன், நாவிதன்வெளி பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ரீ.மோகனகுமார், நாவிதன்வெளி பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிறிநாதன், கிராமசேவை உத்தியோகத்தர் பீ.டி.ஐயூப், 6ஆம் கிராமம் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எச்.அபூவக்கர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சவளக்கடை மத்திய குழுத் தலைவர் ஏ.அஸீஸ், றோயல் விளையாட்டுக் கழக தலைவர் எம்.எச்.கபீர், றோயல் விளையாட்டுக் கழக அணித் தலைவர் வை.பாரிஸ், மிலேனியம் இளைஞர் கழக தலைவர் ஏ.எம்.அஸ்மீர், உயர் அதிகாரிகள், இளைஞர் கழங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.