Advertisement

Main Ad

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசிய கல்லூரியின் மற்றுமொரு சாதனை. ¬-தேசிய மீலாத் போட்டியில், தேசிய ரீதியில் முதலாமிடம்-


கடந்த 2015,11,15ம் திகதி கொழும்பு 12, பண்டாரநாயக்க, மாவத்தை, பாத்திமா மகளிர் கல்லூரியில் ஒன்பது மாகாணங்கள்; கலந்து கொண்ட தேசிய மீலாத் தின இறுதிப் போட்டியில் நிந்தவூர் கமுஃகமுஃஅல்அஷ்றக் ம,ம,வி (தே,பாடசாலை ) சிரேஷ்ட பிரிவு, ஆண்களுக்கான நாடகப் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைத் தட்டிக் கொண்டு, சாதனை படைத்துள்ளது.


நாடகத்தின் தலைப்பு(நெருப்புக் குண்ட வாசிகள்). இந்த நாடகம் கல்முனை கல்;வி வலயத்திலும், காத்தான்குடியில் நடைபெற்ற மாகாண மட்டத்திலும் முதலாம் இடத்தைதட்டிக் கொண்டுள்ளதுடன், 1974ம் ஆண்டு கமுஃகமுஃஅல்அஸ்றக் ம,ம,வி (தே,பாடசாலை)யின் அதிபர் மர்ஹ{ம் எம்.எஸ்.ஹமீது அவர்களது காலத்தில் ‘பண்டாரவன்னியன்’எனும் நாடகம் அரங்கேற்றப்பட்டு தேசிய விருதைப் பெற்றது ,அதன் பிறகு தற்போதைய அதிபர் எஸ்.எம். ஜாபிர் அவர்களது சேவையில் சுமார் 40 வருடங்களின் பின்னர் இந்தநாடகமே தேசிய ரீதியில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்டு, நிந்தவுர் கமுஃகமுஃஅல் அஸ்றக் ம,ம,வி தேசிய பாடசாலைக்கும்,கல்முனை கல்வி வலயத்திற்கும் நன்மதிப்பைத் தேடிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைச் சம்பவமான இந் நாடகத்தை கமுஃகமுஃஅல்அறக் ம,ம,வி (தே,பாடசாலை)யின் ஆசிரியர் அல்ஹாஜ் எம்,எஸ்,அப்துல் றஷீது மௌலவி (ஸர்கி)அவர்கள் எழுதி, வடிவமைத்து அதனைஇயக்க,செல்வன் ஏ,எல், முஸ்பிர் எனும் மாணவன் நாடகத்திற்குத் தேவையான திட்டமிடல் மற்றும் ஒப்பனைகளை வழங்கியுள்ளார்.

இந்நாடகத்தில்; வரும் கதாபாத்திரங்களும், மாணவர் பெயர்களும்.

1) அரசன்:- ஏ.எம். ஜராத்
2) சிறுவன்:- ஐ.எம்.ஐ.இபாஸ் முகம்மது இக்பால்
3) மந்திரவாதி:- எம்.ஆர்.மபாஸ்
4) துறவி:- எம்.கே.எம். அக்தர்.
5) சிப்பாய்;:- 1 எம்.கே.எம். ஜெம்சித்
6) சிப்பாய்;:- 2 எம்.எம். றிஸ்வி
7) சிப்பாய்;:- 3 எம்.எஸ்.எம். இஸாம்
8) ஊர்வசி:- 1 கே. ஜேனோஜ்.
9) ஊர்வசி:- 2 ஏ.எஸ்.ஆகில்
10) ஊர்வசி:- 3 பி. துஸான்.
11) தகப்பன்:- எம். மின்ஹாஜ்

இந்நாடகத்தை எழுதி, அதனைத் தயாரித்து, மாணவர்களையும் நன்கு பயிற்று வித்து, இறுதியில் அகில இலங்கை மட்டத்தில் முதலாமிடம் வரை அதனை வழிநடத்திச் சென்ற சாதனை புரிய வைத்த சங்கைக்குரிய உலமா அல்ஹாஜ் எம்,எஸ்,அப்துல் றஷீது மௌலவி (ஸர்கி)அவர்கள் இப்பாடசாலை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றுச் சென்று ஒரு வருடங்கள் கடந்த நிலையிலும் இப்பாடசாலை மீது அவர் வைத்துள்ள பற்றையும், பாசத்தையும், மாணவர் முன்னேற்றத்தில் அவர் கொண்டுள்ள அக்கரையையும் காட்டுகின்றது. எனவே, அவர் சேவையை இறைவன் பொருந்திக் கொள்ள மாணவர், ஆசிரியர், பெற்றோர் சார்பாகப் பிரார்த்திக்கிறோம்.