Advertisement

Main Ad

125 நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் கல்லூரியின் க.பொ.த (சாஃத) தினத்தில் சாதனையாளர்கள் கௌரவிப்பு....( படங்கள் )


நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியின் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர விழா நேற்று கல்லூரியின் அஸ்றப் ஞாபகர்த்த மண்டபத்தில் இடம் பெற்றது.



கல்லூரி அதிபர் திருமதி.என்.யூ.எச்.எம்.சித்தீக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சுகாதாரப் பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.என்.நசீல், கல்முனை வலய முறைசாராக் கல்வி அதிகாரி எம்.ஏ.ஹமீட் உள்ளிட்ட கல்விமான்கள்,  சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த(சாஃத) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் திறமைச் சித்திபெற்ற மாணவிகளும், கற்பித்த ஆசிரியர்களும் நினைவுச் சின்னம், பரிசுப் பொருட்கள் என்பன வழங்கி, அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசீம் இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும் சேவைகளை நினைவு கூர்ந்து கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.எல்.நிசாமுத்தீன் அவர்களால் பொன்னாடை போற்ற, அதிபர் திருமதி.சித்தீக் அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர்:-  “ மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள எல்லா ஊர்களுக்கும் தேசியப் பாடசாலைகள் கிடைக்கவில்லை என்பதனால் ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் ஒவ்வொரு தேசியப் பாடசாலை வழங்கும் புதிய திட்டமொன்று விரைவில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் இப்பெண்கள் கல்லூரி ஒரு தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்படும்” எனத் தெரிவித்தார்.