Advertisement

Main Ad

ரயிலின் மிதிப்பலகையில் பயணிக்கத் தடை

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தூர இடங்களுக்கு செல்லும் ரயிலின் மிதிப்பலகையில் பயணிக்கத் தடை என  ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில்வே சட்டத்தின்படி மிதிப்பலகையில் செல்லத்தடை விதிக்கட்பட்டுள்ளது என்று ரயில்வே போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரதி முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
 பயணிகளின் பாதுகாப்பிற்காகவே இச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் இது அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.