நிந்தவூர் பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டி நிகழ்ச்சி நேற்று நிந்தவூர் ஹிவ்சோ பாலர் பாடசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.ஆர்.றகுமா தலைமையில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்ச்சியிலும், பரிசளிப்பு விழாவிலும் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வுகளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பர்சாத், சிரேஷ்ட ஊடகவியலாளரும், மனித நலன்புரி சமூக சேவைகள் ஒன்றியத் தலைவருமான ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கு கொண்டு சித்திரங்களை வரைந்த அத்தனை மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்ததக்கதாகும்.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- “எந்த வித பெரிய எதிர்பார்ப்புகளுமின்றி பாலர்களின் நல்லொழுக்கம், பண்பாடு, கலை, கல்வி போன்றவற்றை மேலோங்கச் செய்து, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றப் பாடுபடும் அனைத்து பாலர் பாடசாலை ஆசிரியர்களினதும் வாழ்வை அல்லாஹ் சிறப்படையச் செய்வான் என்பதில் சந்தேகமில்லை” எனத் தெரிவித்தார்.