இன்று தமிழ் திரைப்படங்கள் எமது பிள்ளைகளை ஏமாற்றி சிகரட், உட்பட சாரயம், பியா் போன்ற மதுசார பாவனைகளுக்குத் துாண்டிவருகின்றன. அண்மையில் வெளிவந்த 18 திரைப்படங்களினைப் பாா்த்து தமிழ் முஸ்லீம் சிறுவா்கள் 100 பேரது ஆய்வில் திடுக்கிடும் தகவல். திரைப்படங்களிலிருந்தே தான் சிகரட் பாவிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
நேற்று மதுசார பாவனை மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சிறுவா் தினத்தினை முன்னிட்டு நேற்று தகவல் திணைக்களத்தில் நடாத்திய ஊடக மாநாட்டில் தெரிவிப்பு
இம் மாநாட்டில் வைத்திய கலாநிதி டாக்டா் அனுஸாந்தன், சிரேஸ்ட உள நல மருத்துவா் கனேசன், அடெக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளா் புபுது சுமனசேகர, கலாநிதி ஜீவநாதன் ஆகியோா் ஊடக மாநாட்டில் மேற்படி தலைப்பில் கருத்துக்களை தெரிவித்தனா்.
இலங்கையில் அண்மையில் 3 மாதங்களுக்குள் வெளிவந்த 18 இந்திய தமிழ்த் திரைப்படங்களுள் 17 திரைப்படங்களும் 144.24 நிமிடத்தினை சிகரரெட், மதுசார வகைகளை விளம்பரப்படுத்தியுள்ளன.
நேற்று தகவல் திணைக்களத்தில்
நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. . இத்திரைப்படம் இலாபத்தை ஈட்டிய திரைப்படம, இதில் இறுதி கட்டத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி பியா் குடிக்கும் விதத்தை விளக்கியிருப்பதானது மதுசாரத்தை துாண்டக்கூடிய குறிப்பிட்ட கம்பணிகளினால் மேற்கொள்ளப்பட்ட விளம்பரமே.
சிக்ரட் புகைப்பதனால் ஒரு வருடத்திற்கு இலங்கையில் 2000 பேர் இறக்கின்றனா். பாடசாலை மாணவா்கள் மத்தியில் சிகரட் மற்றும் மதுசாரம் தொடா்பான சாதகமான மனநிலைகளை குறிப்பிட்ட உற்பத்தி நிறுவனங்கள் மறைமுகமாக விளம்பரப்படுத்துகின்றன. உதாரணமாக யாழ் மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டில் மது 36வீதம், சிகரட் 40 வீதம் பாவிப்போா் உள்ளனா்.
எந்தவொரு போதைப்பொருளையும் பாவிப்பதற்கு முன்னா் சிகரெட்டிலேயே ஆரம்பிப்பா். 100 வீதமான ஏனைய போதைப்பொருட்கள் பாவிப்போரும் சிகரட்டில் இருந்தே ஆரம்பிப்பா்.
ஆகவே தான் ஊடகவியலாளா்கள் ஒரு பொறுப்பு இருக்கின்றது. இதறை்கு எதிராக தங்களது போனைகளை பாவிப்பதற்கு சிறுவா்களை மிக இலகுவாக கவா்வது திரைப்படங்களே அந்த நடிகா்ள் காட்டும் நடிப்பிலேயே சிகரட்டை புகைத்து இரச்சிக்க ஆரம்பிப்பா். இதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் படி புத்திஜீவிகள் கருத்து தெரிவித்தனா்.