தனியார் வானொலி ஒன்றின் ஊக்குவிப்பு பிரிவில் பணியாற்றுவதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் மறைக்கப்பட்ட முச்சக்கர வண்டியொன்றில் அரை நிர்வாணமாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.
மாராவில பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எதிரசிங்க தலைமையிலான குழுவினராலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேறு ஒரு கடமை நிமித்தம் நேற்று மாலை பொலிஸார் மாராவில குறூஸ் பள்ளி தல்வில வீதியில் ஜீப் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர். இதன் போது மாராவில கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் ஒன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் பொலித்தீனால் மறைக்கப்பட்ட முச்சக்கர வண்டியொன்றைக் கண்டுள்ளனர்.
இந்த முச்சக்கர வண்டி தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகருக்கு சந்தேகம் எழவே அவர் அவ்விடத்திற்கு பொலிஸ் குழுவினருடன் சென்று குறித்த முச்சக்கர வண்டியைப் பரிசோதித்த போது அதனுள் சிறுமி ஒருவரும் இளைஞர் ஒருவரும் அறை நிர்வாணமாக இருந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
பின்னர் அவ்விருவரையும் முச்சக்கர வண்டியுடன் மாராவில பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது, சந்தேக நபரான இளைஞர் நிக்கவெரட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், முன்னணி தனியார் வானொலி ஒன்றின் ஊக்குவிப்பு பிரிவில் பணியாற்றுபவர் என்றும் தெரியவந்துள்ளது.
தான் பணியாற்றும் வானொலி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றின் நிமித்தம் குளியாபிட்டி பிரதேசத்திற்கு வந்துள்ள குறித்த சந்தேக நபர் அங்கு வைத்து பாடசாலை மாணவியான குறித்த சிறுமியைச் சந்தித்து இருவரும் அறிமுகமாகிக் கொண்டுள்ளனர்.
தான் பணியாற்றும் வானொலி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றின் நிமித்தம் குளியாபிட்டி பிரதேசத்திற்கு வந்துள்ள குறித்த சந்தேக நபர் அங்கு வைத்து பாடசாலை மாணவியான குறித்த சிறுமியைச் சந்தித்து இருவரும் அறிமுகமாகிக் கொண்டுள்ளனர்.
குறித்த சிறுமி பாடசாலை செல்லும் 15 வயதுடைய மாணவி என்றும், மூன்று தினங்களுக்கு முன்னர் சந்தித்து அறிமுகமாகிய சந்தேக நபரின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த மாணவி அன்றைய தினம் பாடசாலைக்குச் செல்லாது சந்தேக நபரைச் சந்தித்து அங்கிருந்து இருவரும் முச்சக்கர வண்டியில் மாராவில கடற்கரை பிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும், இவ்வாறு வந்தவர்களே இவ்வாறு முச்சக்கர வண்டியில் அரை நிர்வாணமாக இருந்த நிலையில் அகப்பட்டுக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ளதோடு அம்மாணவியை வைத்திய பரிசோதணைக்காக மாராவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.