வீடியோ பேராசிரியர் தாரிக் றமடானின் நிகழ்வு:-
முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான பேருவளை மர்ஹும் பாக்கீர் மாக்காரின் நினைவாக இடம் பெற்ற கூட்டத்தில் நிகழ்கால முஸ்லிம்களுக்கு தேவையான இஸ்லாம் எனும் பொருள்பட உலப்புகழ் ஒக்ஸ்போட் பல்கலைக் கழக பேராசியர் தாரிக் றமடான் உரையாற்றினார். இந்நிகழ்வில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முன்னாள் இங்கிலாந்திற்கான இலங்கைத் தூதுவர் பாயிஸ் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஃமான், ஏ.எச்.எம்.அஸ்வர், முன்னாள் பராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான சுகைர், முஸ்லிம் கல்விமான்கள், அரசியல் பிரம்கர்கள், சர்வமத சகோதரர்கள், அஸ்ஸஹீத் அஸ்ரபின் துனைவியார் பேரியல் அஸ்ரஃப் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.