Advertisement

Main Ad

பிஸ்மி கிண்டர்காடனின் 2015 இல்ல விளையாட்டுப் போட்டி-படங்கள்




காத்தான்குடி பிஸ்மி கிண்டர்காடன் பாலர் பாடசாலை மாணவர்களின் இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 20 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில்  வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பிஸ்மி கிண்டர்காடனின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில்  பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நளீமி),மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத்,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி),இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் அமீர் டாக்டர் எம்.எஸ்.எம்.நுஸைர்,மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை டாக்டர் ஏ.எச்.எம்.ஆஸாத் ஹஸன்,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எச்.ஏ.எம்.மிஹ்ழார்,ஆசிரியர் வித்தியாகீர்த்தி எம்.எம்.அமீர் அலி, உட்பட பிஸ்மி குழுமத்தின் பணிப்பாளர்கள் ,உறுப்பினர்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பிஸ்மி கின்டர்காடனின் இல்ல விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட  பாலர்களுக்கும், கற்பித்த ஆசிரியைகளுக்கும் அதிதிகளினால் சான்றிதழும், நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டன.​

இப்னு உமர், இப்னு அப்பாஸ், ஹசன், ஹ_சைன் என 4 இல்லங்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன.

மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் விஷேட அம்சமாக உலகத்தை கலக்கிய முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் எனும் தொனிப்பொருளில் வினோத உடை நிகழ்வும் மேடையில் அரங்கேற்றப்பட்டது.

இங்கு பிஸ்மி கிண்டர்காடன் மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு வித்தியாசமான ,சுவாரஷ்யமான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதிலும் குறிப்பாக குண்டெறிதல், தட்டெறிதல், குறி பார்த்து அம்பு எய்தல், அஞ்சல் ஓட்டம், தடை தாண்டல் ஓட்டம் போன்ற மெய்வல்லுனர் விளையாட்டுக்களும் சங்கீதக் கதிரை போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களும் உயிர் எழுத்து தெரிதல், உருவங்களை வகைப்படுத்தல் போன்ற அறிவுசார் விளையாட்டுக்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.