கன்டி மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியாரின் மணைவி வயது 44 நான்கு குழந்தைகளின் தாய் கடந்த 3 மாதங்களாக அசாத் சாலியினால் தடுத்து வைத்துள்ளதாக இன்று உவைஸ் ஹாஜியார் மற்றும் அவரது திருமனமுடித்த லண்டனில் வாழ்கின்ற மகனும் ஊடக மாநட்டில் தெரிவித்தனா்.
இவ் ஊடகா மாநாடு பம்பலப்பிட்டி சிட்டி கோட்டலில் நடைபெற்றது. ஏராலானமான ஊடகங்கள் இதில் கலந்து கொண்டனா்.
நேற்று முன் தினம் நாவலையில் உள்ள அசாத் சாலியின் வீட்டில் தனது மனைவியை அசாத் சாலி பலவந்தமாக தடுத்து வைத்துள்ளதாக அசாத் சாலியின் மனைவியும் மகளும் தனக்கு அறிவித்தனா்.
அவா் கையில் பிஸ்டல் வைத்துக் கொண்டு அமைச்சா் பாதுகாப்பு பிரிவினா்களினால் இருவா் வைத்துக்கொண்டு எங்களை அந்த வீட்டுக்கு செல்ல முடியாமல் தடுக்கின்றார். அத்துடன் அவரது மகளும் மனைவியையும் அசாத சாலி துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினாா். அவா்களும் பொலிசில் முறையிட்டனா்.
மேற்படி எனது மனைவி இங்கு வைத்திருப்பதாக வெலிக்கடை பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனது மனைவி காணாமல் போன திகதியிலும் கண்டியில் முறைப்பாடு செய்துள்ளேன்.
எனது மனைவியே தனது மகனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார் என்னை அசாத் சாலி கடத்தி வைத்துள்ளதாக தொலைபேசி முலம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிிஸ் குழு அங்கு சென்று தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் வாக்கு முலங்களையும் பதிவு செய்துள்ளனா்.
லாபீா் ஹாஜியார் இங்கு கருத்து தெரிவிக்கையில்
கடந்த மாகாண சபைத் தோ்தலுக்காகவே மத்திய மாகாணசபையில் நான் அவருக்கு உதவி செய்தேன். அதில் இருந்தே அவா் பழக்கம் ஏற்பட்டது. அத்துடன் எனது குடும்பம் அவரது குடும்பம் மிகவும் அன்நியோன்னியமாக பழகினார்கள். கடைசியில் எனது மனைவியையே அசாத் சாலி கள்ளத் தொடா்பு வைத்திருந்துள்ளார்.
இவா் ஏற்கனவே முஸ்லீம்களின் தலைவா் எனக் கூறுபவா் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுகின்றாா். இவருக்காக எனது சிபாரிசின் பேரிலேயே கண்டியில் வாக்களித்த மக்கள் கிளாந்து எழ வேண்டும். அத்துடன் மத்திய மாகாண சபையிலும் கூட இவர் இன்னொருத்தா் குடும்பத்தை குழைத்து அக் குடும்பத்தினை நடு வீதிக்கு கொண்டு வரும் செயலிலும் அத்துடன் அச்சுருத்தல் செய்வதிலும் வல்லவா்.
இவா்கள் முஸ்லீம்களின் தலைவா் என சொல்வது ?
இவா் ஏற்கனவே கொழும்பில் பெரும்பாண்மை இன பெண் ஒருவரை திருமணமுடித்து அதிலும் ஒரு பிள்ளை உள்ளது அந்த பெண்னை டிவோஸ் செய்துள்ளார். அவரது முத்த மனைவிக்கு 3 குழந்தைகள் உள்ளன.
எனது மகண் இவா் லண்டனில் உள்ளார். மற்றவா் அமேரிக்காவில் உள்ளார். நான் சிறந்த வியாபாரம் செய்பவா். பிரதேசசபைத் தலைவராக இருந்து இரண்டு முறை மாகாண சபை உறுப்பிணராக இருந்து வருகின்றேன்.
ஒரு நண்பனில் வீட்டுக்கு வந்து அவரோடு பழகி அந்த நண்பனின் மனைவியே கூட்டிக் கொண்டு செல்லாமா? முஸ்லீம் திருமணச் சட்டத்தில் இவ்வாறவா்களுக்கு கல்லெறிந்து கொல்ல வேண்டும் கசைஅடி கொடுத்தல் வேண்டும். எனது மனைவி முறையாக தலாக் செய்து அதன் பிறகு இத்தா இருந்து விலகிய பின் அவா் முறைப்படி இஸ்லாமிய முறைப்படி திருமணம் முடிக்கலாம்.
அவா் ஊடகங்களிலும் சமுகத்திற்காகவும் இந்த நல்லாட்சிக்காகவும் சொல்கின்ற செயல் என்ன? அவா் அசல் பழக்க வழங்கம் என்ன ? என்று இந்த நா ட்டுக்கு தெளிவுபடுத்தவே நான் இந்த ஊடகவியலாளா் மாநாட்டினை கூட்டினேன்.
இவ்வாறான போலி முஸ்லீம் தலைவா்கள் சமுகத்தில் இருந்து ஓரங்கட்டப்படல் வேண்டும். இந்த நாட்டில் முஸ்லீம்களது குடும்பங்களது எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளது. அதனை சிறந்த தலைவா்கள் அதனை முறையான இஸ்லாமிய வாழ்க்கை முறைப்படி அனுகி அதனை தீா்த்து வைத்துள்ளார்கள்.
இவ்வாற தலைவா்கள் போலி வாழ்க்கை என்ன? இவருக்கு கண்டியில் வாக்களித்த மக்கள் கிளாந்து எழ வேண்டும். இவா்கள் பாராளுமன்ற உறுப்பிணா் அல்லது வேறு எந்த பதவிகளில் வந்தால் இந்த நாட்டில் வாழும் முஸ்லீம் சமுகத்திற்கு என்ன நடக்கும். ஆகவே இதனை பிரதம மந்திரி ஜனாதிபதி , பொலிஸ்மாஅதிபா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என உவைஸ் ஹாஜியார் கணனீா் மல்க கூறினார்.
உவைஸ் ஹாஜியின் மகன் இந்த ஊடக மாநாட்டில்
எனது தாயின் நிலைமை பற்றி கூற இயலாமையாக உள்ளது. நான் எனது சகோதராகள் எனது தந்தைக்கு இவ்வாறன இழுக்கு நிலை வந்த பிறகு நாம் எப்படி சமுகத்தில் முகம் கொடுப்பது. ? ஒரு தாயை இழந்து 4 குழந்தைகளின் நிலைமையை ஊகடவியலாளா்கள் நீங்கள் சிந்தித்து பாருங்கள். எனது தாயை இந்தியாவுக்கு கொண்டு சென்றிருக்கிறார். அவா் சென்ற விசா மற்றும் சகல தஸ்தாவேஜ்ஜூகளும் நாங்கள் எடுத்துள்ளோம்.
எனக்கு தொலைபேசி எடுத்தார். அவா் சொல்லுகிறார். அசாத் சாலி பலவந்தமாக கொண்டு வைத்துள்ளதாக தொடா்பை ஏற்படுத்தி எனக்கு சொல்லியிருக்கிறார். இச் செயல்களினால் எங்களது வாழ்க்கையும் பாழகிவிட்டது,