Advertisement

Main Ad

தூய கடற்கரை 2015 வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு...( படங்கள் )



தூய கடற்கரை 2015 வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய கரையோர கடற்பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலை திட்டத்துக்கு அமைவாக இன்று (22) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரையோர பிரதேசங்கள் அனைத்தும் துப்பரவு செய்யும் பணி அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடை பெற்றது.

இப்பணியில் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகள், சுகாதார வைத்திய காரியாலயம், கிராம அபிவிருத்தி சங்கம், மகளிர் கிராம அபிவிருத்தி சங்கம், தேசிய கல்விக்கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உட்பட அரச உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன் இப்பணி ஆரம்பமானது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரத்னவீர, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைதுவ உதவி பணிப்பாளர் ஏ.ஏ.சமட் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.