கட்டார் நாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் சம்பளத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வங்கி ஊடாக வழங்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, அந்நாட்டு அதிகாரிகாரிகளிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் அப்துல்லாஹ் சாலிஹ் அல்-குதைபி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சம்பளம் வங்கி மூலம் வழங்கப்படும் போது, சம்பளம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாடுகள் குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.