Advertisement

Main Ad

ஐ.எஸ் அமைப்பு மீது விரக்தி ஏன்? விலகிய தீவிரவாதிகளிடையே ஆய்வு...


Image copyrightIS
Image captionஐ.எஸ் அமைப்பு மீது விரக்தி ஏன்? விலகிய தீவிரவாதிகளிடையே ஆய்வு

இஸ்லாமிய அரசு என்ற குழுவிலிருந்து விலகிய 60 தீவிரவாதிகளின் கருத்துக்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, அவர்கள் ஏன் அந்த அமைப்பு மீது விரக்தியடைந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஜிஹாதிக் குழுக்களிடையே நடக்கும் உள்மோதல்தான் இதற்கு ஒரு மிக முக்கிய காரணம் என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி நடத்திய இந்த ஆய்வு காட்டுகிறது.
ஐ.எஸ் அமைப்பு சக சுன்னி முஸ்லீம்களைக் கொடூரமான முறையில் நடத்துவதை சில விலகிய தீவிரவாதிகள் ஏற்கவில்லை.
ஐ.எஸ் ஆட்சியில் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்கள் மற்றுமொரு காரணமாகும். இவை ஐ.எஸ் குழுவின் பிரச்சாரத்துக்கு நேரெதிராக இருந்தன
மேலும் இருவர் தாங்கள் தற்கொலை குண்டுதாரிகளாக அனுப்பப்படவிருக்கிறோம் என்பதை அறிந்த பின் அமைப்பிலிருந்து விலகினர்.