கம்பஹா பொலிஸ் பிரிவில் கண்டி வீதி பெலும்மஹர பிரதேசத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
வலான குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
விபச்சார விடுதியை இயக்கிச் சென்ற ஒருவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்கள் கம்பஹா, பிலியந்தல, எம்பிலிபிட்டிய மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்த 23, 24, 31, 26 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments