( நிந்தவூர் தினகரன் விசேட நிருபர் )
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் 2015. 06. 13 தொடக்கம் 2015. 06. 16 வரை நடைபெற்ற இப்போட்டியில் நிந்தவூர் அல் - அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களையும் 5 வெள்ளிப்பதக்கங்களையும், 3 வெங்களப்பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.

21 வயதுப்பிரிவு ஏ . அஸ்மத் சஹி நீளம் பாய்தலில் தங்கப்பதககத்தையும்
19 வயதுப்பிரிவு எம். ஜ. எம். அசான் குண்டு போடுதலில் தங்கப்பதககத்தையும், தட்டெறிதலில் வெள்ளிப்பதக்கத்தினையும, நீளம் பாய்தலில் வெண்கலப்பதக்கத்தினையும்
15 வயதுப்பிரிவு 4ஒ100 ஆ அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்
ஏ அய்யாஸ்,
எம். ஜ. ஏம் ஹமாஸ்,
எம் ஏ. எம். அம்றி,
எம். என். அம்றி ஹஸ்னி.
எம். கே. ஏம். அசாயிம்
21 வயதுப்பிரிவு எம். எஸ். எம். பாகிர் உயரம் பாய்தலில் வெண்கலப்பதக்கத்தினையும்
17 வயதுப்பிரிவு ஏ. ஏ. ஆத்திப் அஹமட் முப்பாய்ச்சலில் வெண்கலப்பதக்கத்தினையும பெற்று அல் - அஷ்றக் தேசிய பாடசாலைக்கும் கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இதில் குறிப்பாக ஏ . அஸ்மத் சஹி 2015 ஆண்டின ;21 வயது ஆண்கள்;பிரிவு நீளம் பாய்தலில் 6.54 ஆ தூரம் பாய்ந்து சிறந்த மெய்வல்லுனர் வீரராகவும், 2015 ஆண்டின் கிழக்கு மாகாண சிறந்த மெய்வல்லுனர் வீரராகவும் தெரிவு செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கும் , கல்முனை வலயத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெருவிளையாட்டுக்களில் 15 வயது ஆண்கள் பிரிவு பூப்பந்தாட்ட அணி சம்மியனாகவும் 19 வயது ஆண்கள் பிரிவு பூப்பந்தாட்ட அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சாதனை மாணவர்களுடன் அதிபர், உதவி அதிபர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்தையே இங்கு காண்கிறீர்கள்.