Advertisement

Main Ad

பதவியேற்ற கி.மா.ச.உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தனது சொந்த ஊரான சம்மாந்துறையில் வரவேற்பு...( படங்கள் )




கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் பதவியேற்ற ஐ.எல்.எம்.மாஹிர் தனது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு நேற்று இரவு விஜயம் மேற்கொண்ட போது பிரதேச மக்களினால் பட்டாசு கொழுத்தப்பட்டு மகத்தான வரவேற்பழிக்கப்பட்டது.

கல்முனை - அம்பாரை பிரதான வீதி வழியாக ஐ.எல்.எம்.மாஹிர் தனது ஆதரவாளர்களால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஹிஜ்ரா சந்தியை அடைந்து சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்மா பள்ளிவாசலிற்கு சென்று  சம்மாந்துறை உலமா சபை தலைவர் மௌலவி அல்துல் காதர் தலைமையில் துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

இதன்போது கல்விமான்கள், உலமாக்கள், புத்திஜீவீகள், இளைஞர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், போராளிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.