Advertisement

Main Ad

சஜீன்வாஸ் குணவர்த்தன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்...



கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டில் இவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால் பிணை இரத்துச் செய்யப்படும் எனவும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமை இரகசியப் பொலிஸில் ஆஜராக வேண்டும் எனவும் சஜீன் வாஸூக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கடந்த மே மாதம் 11ம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.