63 வயதான பீட்டர் பெட்ரிக்ஷன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இவரின் மனைவியான ஆபிரிக்காவின் லெசோத்தோ நாட்டைச் சேர்ந்த பெண், பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து பீட்டர் பெட்ரிக்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீட்டர் பெட்ரிக்ஷன் தனக்கு மயங்கமருந்து கொடுத்து தனது அந்தரங்க உறுப்பை கத்தரித்ததாக மேற்படி பெண் பொலிஸாருக்குத் தெரிவித் திருந்தார்.
சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பல பொருட்களும் அவ்வீட்டில் காணப்பட்டன.
பெட்ரிக் ஷனின் மனைவி தவிர பாதிக்கப்பட்ட ஏனைய 20 பெண்களும் யார் என்பதை அறிவதற்கு பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இப்பெண்கள் உயிருடன் இருக்கும்போதா அல்லது இறந்த பின்னரா அவர்களின் பிறப்புறுப்புகள் வெட்டப்பட்டன என்பது குறித்து தென் ஆபிரிக்க அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
இவர் கடையொன்றை நடத்தி வருபவர் எனவும் பெண்களின் அந்தரங்க உறுப்பை சிதைக்கும் சிகிச்சையை தான் மேற்கொண்டுவந்தமை குறித்து டென்மார்க் ஊடகவியலாளர்களிடம் இவர் பெருமையாக கூறியிருந்தார் என டென்மார்க் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.